#Breaking:தொடங்கிய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் !

சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் தலைமை அலுவலகத்தில் சிறிது நேரத்திற்கு முன்பாக தொடங்கியுள்ளது.
அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த டிச.1 ஆம் தேதி நடைபெற்றது.இந்த கூட்டத்தில்,கட்சியின் சட்ட விதி 20(அ) பிரிவு திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,அதிமுக ஒருங்கிணைப் பாளர்களை கட்சியின் தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் விதமாக சட்ட விதிகள் மாற்றப்பட்டுள்ளது.மேலும்,பொதுச்செயலாளர் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப் பாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து,அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும்,8 ஆம் தேதியன்று அதன் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அதிமுக தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான வேட்புமனு தாக்கல் சற்று முன்னர் தொடங்கியுள்ளது.ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாட்சி ஜெயராமன் அவர்கள் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் நடைப்பெறுகிறது.
மேலும்,இந்த வேட்புமனு தாக்கல் நாளை பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,ஓபிஎஸ்,ஈபிஎஸ் நாளை தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025