ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு.!
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. கடந்த 15ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்து உள்ளது. மனு தாக்கல் தொடங்கிய முதல் 6 நாட்களில் 64,299 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலினை நாளை நடைபெற உள்ளது. வேட்புமனுக்களை திரும்ப பெற செப். 25ம் தேதி கடைசி நாள். அக். 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும், உள்ளாட்சி பதவிகளுக்காக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேல் வேட்புமனு தாக்கலாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 12-ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.