சனி, ஞாயிறில் வேட்பு மனு தாக்கல் நோ., தேர்தல் புகார்களை இந்த எண்ணில் தெரிவிக்கலாம் – சத்யபிரதா சாகு
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கவுள்ளோம் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும்.
சட்டப்பேரவை தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 76 மையங்களில் எண்ணப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பான புகார்களை 1,950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய கூடாது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அரசங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்கள் கொண்டு வாக்களிக்கலாம். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை சந்தித்து தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கவுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள், ஊடகங்கள், அரசியல் கட்சியின் வலைத்தளங்களில் உரிய முறையில் விளம்பரம் செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தார். வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள், வாக்குப்பதிவு முடியும் முன் 3 வெவ்வேறு நாளில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும்
மேலும் வாக்காளர் சீட்டுக்கு பதில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்றும் வாக்காளர் தகவல் சீட்டில், வாக்கு சாவடி மையம், வாக்குப்பதிவு நாள், வாக்குப்பதிவு நேரம் ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். தமிழகத்தில் தர்மேந்திரா குமார், மது மகாஜன், பி.ஆர்.பாலக்ரிஷ்ணன் ஆகியோர் சிறப்பு தேர்தல் பார்வையாளர்களாக நியமனம் செய்யபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.