வேட்பாளர் தேர்வு: ஓபிஎஸ் – இபிஎஸ் மோதல்?., துணை முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கவில்லை.!

Default Image

அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்வதில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீசெல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. அதிமுகவில் வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்த ஆலோசனை கடந்த இரண்டு நாட்களாக சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதிமுக நேரடியாக போட்டியிடும் மற்ற தொகுதிகளுக்கான வேட்பளர்கள் தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை ஒதுக்குவதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று அதிமுக தலைமையில் மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்ற மகளிர் தின விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்துகொள்ளவில்லை. அதேநேரத்தில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியுடன் தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்