வேட்பாளர் பட்டியல் வெளியானது.. 30 அமைச்சரில் 3 அமைச்சர்களுக்கு சீட் மறுப்பு..!
இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலில் அமைச்சர்கள் வளர்மதி, பாஸ்கரன், நிலோபர் கபீல் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் முதல் வேட்புமனு தாக்கல் நடைபெறயுள்ளது. இதனால், சற்று நேரத்திற்கு முன் அதிமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியலை முதல்வர், துணை முதல்வர் வெளியிட்டனர்.
அதில், இந்த சட்டமற்ற தேர்தலில் அதிமுகவில் உள்ள 30 அமைச்சர்களில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய 3 அமைச்சர்களை தவிர மீதமுள்ள 27 அமைச்சர்களுக்கும், 45 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வர் உட்பட 6 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர்களின் முதற் கட்ட பட்டியலை கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.