வேட்பாளர் சர்ச்சை – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் இன்று முறையீடு!
அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் முறையடு.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஒப்புதல் படிவம் அளிக்க உள்ள நிலையில், ஆலோசனை ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இடைத்தேர்தலில் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர் யார்? என்பது குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிளைக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருதரப்பும் தங்களது வேட்பாளரை அறிவித்துள்ளதால் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைக்குமா?, அப்படி கிடைத்தால் யாருக்கு கிடைக்கும் என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.
இந்த சமயத்தில் வேட்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, இபிஎஸ் தரப்பு அதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பில் தென்னரசு தான் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என ஒப்புதல் படிவத்தை அவைத்தலைவர் வெளியிட்டு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பி வைத்தார். இதனை தற்போது, தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க டெல்லி சென்றுள்ளார்.
இந்த சூழலில், இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதிமுகவில் வேட்பாளர் சர்ச்சை இருந்து வரும் நிலையில், தமிழ்மகன் உசேன் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் இன்று ஓ.பன்னீர்செல்வம் முறையிட போவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, அதிமுகவில் இபிஎஸ் அணிக்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாகவும், அவருக்கு தான் ஆதரவு அதிகம் உள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதாவது, இபிஎஸ்க்கு 2539 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாகவும், ஒபிஸ்க்கு 136 பேர் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்று மாவட்ட செயலாளர்களில் இபிஎஸ்க்கு 70, ஒபிஸ்க்கு 5 என்றும் ஒன்றிய செயலாளர்களில் இபிஎஸ்க்கு 755, ஒபிஸ்க்கு 30 எனவும் தகவல் வெளியகியுள்ளது. மேலும் 61 சட்டமன்ற உறுப்பினர்கள் இபிஎஸ்க்கும், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒபிஸ்க்கும் ஆதரவு என கூறப்படுகிறது.