புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும் – மமக
மத்திய அரசு 11 முதல் 15 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் தடுப்பூசி வழங்க வேண்டும் என ஜவாஹிருல்லா கோரிக்கை.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் 8 நிமிடத்துக்கு ஒரு பெண், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பேர் கருப்பை புற்றுநோயால் பதிப்பதாகவும், அதில் 75,000 பேர் இருப்பதாகவும் தெரிய வருகிறது என்றும் கூறியுள்ளார்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எச்.பி.வி. தடுப்பூசியை செலுத்துவதன் மூலம் தடுக்க முடியும் என பல்வேறு நாடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அரா இதுவரை தடுப்பூசியை இலவசமாக கர்ப்பிணிகளுக்கு வழங்கவில்லை என்றும் மத்திய அரசு 11 வயது முதல் 15 வரையுள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.