ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து-அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், தனியார் பள்ளிகளை முறைப்படுத்த விரைவில் சட்டம் இயற்றப்படும்.அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கல்விக்காக விரைவில் தொலைக்காட்சி தொடங்கப்படும்.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பு கட்டணம் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தார்.