“ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து” – ஓபிஎஸ் அறிக்கை

Published by
லீனா

தி.மு.க., இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் அறிக்கை 

அந்த அறிக்கையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து” என்று மேடைக்கு மேடை முழங்கி அதன்மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தி.மு.க., இரண்டு ஆண்டுகள் ஆகியும் நீட் தேர்வினை ரத்து செய்ய எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது.

இதன் காரணமாக, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவன் செல்வன் தனுஷ், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி செல்வி கனிமொழி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வி சௌந்தர்யா என்ற வரிசையில் தற்போது திருப்பத்தூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவர் செல்வன் பரமேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்த செல்வன் பரமேஸ்வரன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

“மனதில் உறுதி வேண்டும்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகளுக்கு ஏற்ப மாணவ, மாணவியர்கள் மன திடம் படைத்தவர்கள். இருப்பினும், ‘ஏமாற்றப்பட்டு விட்டோமே’ என்கிற மன உளைச்சல், மருத்துவக் கனவு பலிக்காதோ என்கிற கவலை, நீட் தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தால் பெற்றோர்களுக்கு நிதிச் சுமை ஏற்படுமோ என்கிற சங்கடம் போன்றவைதான் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு காரணங்களாகும். இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளாகி இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுக்கின்றனர்.

மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுதுவதற்கு எத்தனையோ வாய்ப்புகள் உள்ள நிலையில், வாழ்க்கையில் உயர் கல்வி பயிலுவதற்கு மருத்துவம் சார்ந்த மற்றும் மருத்துவம் சாரா பாடப் பிரிவுகள் பல இருக்கின்ற நிலையில், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி என பல்வேறு தேர்வுகளை எழுதி மிக உயர்ந்த அரசு பதவிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் எல்லாம் மாணவ, மாணவியருக்கு உள்ள நிலையில், இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுப்பது மிகுந்த மனவேதனையை எனக்கு அளிக்கிறது.

மாணவச் செல்வங்கள் வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், இதுபோன்ற விபரீத முடிவுகளை மாணவ, மாணவியர் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதுகுறித்த விழிப்புணர்வை மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்களிடம் ஏற்படுத்தவும், நீட் தேர்வினை ரத்து செய்யவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

நாளை கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கடலூர் :  வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…

20 minutes ago

“அமரன் படம் சூப்பர் நண்பா”…இயக்குநரை நேரில் அழைத்து பாராட்டிய தளபதி விஜய்!

சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…

40 minutes ago

பந்து வீச்சில் மிரட்ட போகும் பல்தான்ஸ்! மும்பையின் படைப்பலம் இதுதான்!

மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…

1 hour ago

வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? மருத்துவ ஆலோசனை இதோ…

வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…

1 hour ago

கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!

புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

2 hours ago

“பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை”…அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…

2 hours ago