குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து -ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

Default Image

உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

குட்காவை சட்டப்பேரவைக்கு எடுத்துச் சென்றது தொடர்பாக உரிமை மீறல் நோட்டீஸ் மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்களுக்கு அனுப்பப்பட்டது . உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், ‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.

இந்நிலையியில் குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து மற்றும் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன், கொறடா சக்ரபாணி உள்ளிட்டோருடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்