கஜா புயலை தொடர்ந்து இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயலால் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கஜா புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ளார்.தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.அதேபோல் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கஜா புயல் காரணமாக இன்று நடைபெறுவதாக இருந்த பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.காரைக்குடி அழகப்பா பல்கலைகழக இணைப்புக் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது .தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதேபோல் இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்தது.
ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் நேற்று நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் வரும் 22ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…