தினசரி சுங்க வசூல் ரத்து.. ரூ.1000 வருவாய் – வியாபாரிகள் மகிழ்ச்சி!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கரூர் வியாபாரிகளிடம் தினசரி சுங்க வசூல் ரத்து என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு.
சுங்க வசூல் ரத்து:
கரூரில் 2000க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வந்த தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவை அடுத்து, தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கரூரில் தரைக்கடை வியாபாரிகளிடம் ஒப்பந்ததாரர்கள் டெண்டர் எடுத்து சங்க வசூல் செய்து வந்தனர்.
தேர்தல் வாக்குறுதி:
வியாபாரிகளுக்கு சங்க வசூல் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதனடிப்படையில், ஜவஹர் பஜார், உழவர் சந்தை, கோவை சாலை, வெங்கமேடு, தான்தோன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டது. தினசரி சுங்க வசூல் ரத்து செய்யப்பட்டதால் மாதந்தோறும் ரூ.1000 வருவாய் கிடைத்துள்ளதாக வியாபாரிகளின் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.