பயணிகளின் உயிரோடு விளையாடாமல் ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து செய்க – டிடிவி

Published by
பாலா கலியமூர்த்தி

தற்போதைய நடைமுறையிலேயே ஓட்டுநர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கோரிக்கை.

தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் அடிப்படையில் 400 தற்காலிக ஓட்டுநர்களை நியமனம் செய்ய போக்குவரத்துறை திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 12 பணிமனைகளில் ஒப்பந்த ஓட்டுநர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஓட்டுநர்களை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்ட நிலையில், சென்னையை சேர்ந்த 4 தனியார் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன எனவும் தாவல் வெளியாகி இருந்தது.

ஊழியர்கள் மத்தியில் அதிருப்தி:

இந்த நிலையில், ஓட்டுநர்கள் நியமனம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசின் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவன ஒப்பந்தம் மூலம் 400 ஓட்டுநர்கள் நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டிருப்பது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.

ஊழியர்கள் மத்தியில் கேள்வி:

அரசு பேருந்து போக்குவரத்து தனியார் மயமாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என துறை அமைச்சர் உறுதி அளித்ததற்கு மாறாக அரசு போக்குவரத்து தனியார் மயமாக்கப்படுகிறதோ என்று தொழிலாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஓட்டுநர்கள் தேர்வு செய்யப்படும் விதம், அவர்களின் திறன் குறித்து ஊழியர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய நடைமுறை:

இந்த நிலையில் அவர்கள் அரசு விரைவுப் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டால் அதில் பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நேரிடும் என்றும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, பயணிகளின் உயிரோடு விளையாடாமல் 400 ஓட்டுநர்களை நியமிப்பதற்கான ஒப்புதலை ரத்து செய்து அரசு போக்குவரத்துக்கழகத்தில் உள்ள தற்போதைய நடைமுறையிலேயே ஓட்டுநர்களை தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

எழுந்த கண்டனங்கள்.. யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைப்பு! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை : தேசிய தேர்வு முகமை கடந்த ஆண்டு இறுதியில் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு…

3 hours ago

100 நாள் வேலைத் திட்டம் ஊதிய நிலுவைத் தொகை : பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஏற்கனவே, மத்திய அரசு நிதி சரியாக வழங்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்த நிலையில்,…

4 hours ago

பொங்கல் திருநாள் : த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து!

சென்னை : நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…

4 hours ago

“பின் வாங்குற பழக்கம் இல்லை “.. இட்லிகடை ரிலீஸ் தேதியை உறுதி செய்த தனுஷ்!

சென்னை : தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லிகடை திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த…

4 hours ago

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் : தெற்கு ஜப்பானில் உள்ள கைஷூ பகுதியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. 6.8 என்ற ரிக்டர்…

5 hours ago

H1B விசா கொள்கையில் மாற்றம் வருமா? கலகத்தில் அமெரிக்க வாழ் இந்தியர்கள்.!

நியூ யார்க : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவி ஏற்க போகிறார். அந்த…

5 hours ago