வணக்கம் என்று கூறி கனடா பிரதமர் பொங்கள் வாழ்த்து.. மனம் மகிழும் ஐந்தினை மக்கள்..

Default Image
  • உலக தமிழர்கள் கொண்டாடும் சிறப்பு திருநாளான பொங்களுக்கு  கனடா நாட்டின் பிரதமர்  பொங்கள் வாழ்த்து.
  • பெருமிதம் கொள்ளும் வாழ்த்திற்க்கு மனம் மகிழும் மக்கள்.

தமிழகம்  மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகை கோலகலமாக கொண்டாடி வருகிறனர். தை மாதம் முதல் நாள் நெல் அறுவடை செய்து, தை முதல் நாளில், சூரியனை வணங்கி, பொங்கல் வைத்து வழிபடுபது வழக்கம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  இந்திய அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பொங்கல் வாழ்த்து தெரிவித்து ஒரு  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,  தமிழில் வணக்கம் என  தெரிவித்து தனது வாழ்த்தை பதிவிட்டுள்ளார். கனடாவின் வலிமையிலும், செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது எனக் கூறியுள்ள அவர்,  தை பொங்கல் கொண்டாடும் இந்த வேளையில், தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்து ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமிதம் கொள்ளும் அளவில் உள்ளதாக கருதுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்