இனியும் அமைதி காக்கலாமா?., உடனடியாக கூட்டுங்கள் சட்டமன்றத்தை – முக ஸ்டாலின்
கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என விவசாயிகளைக் காப்பதில் முதல் மாநிலமான தமிழ்நாடு இனியும் அமைதி காக்கலாமா? என முக ஸ்டாலின் அறிக்கை.
இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பஞ்சாப்பை அடுத்து கேரள சட்டப்பேரவையிலும் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கடும் குளிரை கூட பொருட்படுத்தாமல் 37 நாட்களாக தொடர்ந்து இரவும், பகலுமாக விவசாயிகள் டெல்லியில் திடமான சிந்தையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை திரும்ப பெறுதல் மற்றும் குறைந்தபட்சம் ஆதார விலையை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகளின் கோரிக்கைகளாக இருந்து வருகிறது. முதன் முதலில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில் விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடு இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைள் நிறைவேற வலியுறுத்துவது கால கட்டாயம்.
தமிழக சட்டமன்றத்தின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதற்கு தமிழ்நாடு சட்டமன்றத்தை உடனடியாக கூடுமாறு அன்புடன் கேட்க்கொள்கிறேன் எனவும் திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப்பை அடுத்து கேரள சட்டப்பேரவையிலும் #FarmBills-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
கடன் தள்ளுபடி, இலவச மின்சாரம் என விவசாயிகளைக் காப்பதில் முதல் மாநிலமான தமிழ்நாடு இனியும் அமைதி காக்கலாமா?
தமிழ்நாடு சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை @CMOTamilNadu உடனே கூட்டி தீர்மானம் நிறைவேற்றுக! pic.twitter.com/frBQUPFbuh
— M.K.Stalin (@mkstalin) January 1, 2021