தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது.ஆனால் இடைத்தேர்தலில் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடாமல் தனித்து போட்டியிட்டது.மேலும் திமுக கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை.திமுகவுடன் மக்களவையில் கூட்டணி வைத்து காங்கிரஸ் போட்டியிட்டது.காங்கிரஸ் போட்டியிட்ட 8 இடங்களில் தமிழகத்தில் வெற்றிபெற்றது.
இந்த நிலையில் தான் இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசியது திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று நாங்குநேரியில் நடைபெற்று வரும் செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசினார்.அவர் பேசுகையில்,தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதை பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் . 50 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா? என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.
மற்ற கட்சிகளை போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது.குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும்.கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது, 50 ஆண்டுகளாக பார்க்கிறேன், மேடை கட்டுபாடு என்பது நம்மிடம் இல்லை என்று பேசினார்.இவரது இந்த திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசலை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…