நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என சொல்ல முடியுமா? முதலமைச்சர் – இபிஎஸ் காரசார வாதம்.!
சட்டப்பேரவையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போதுதான் நீட் கொண்டுவரப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

சென்னை: இன்றைய சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில் பேசிய, எடப்பாடி பழனிசாமி மாற்றம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடையே காரசார வாதம் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,”நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதே திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான். நீட்டை ஒழிப்பதாக பொய்யான வாக்குறுதியை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்தது” என்று கூறினார்.
அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், “நாங்கள் பொய் வாக்குறுதி கொடுக்கவில்லை. எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்திருந்தால் நீட் ரத்து செய்யப்படும் என்றே சொன்னோம். நாங்கள் ஏமாற்றி ஆட்சிக்கு வரவில்லை” என்றார்.
அதிமுகவுக்கு தகுதி உள்ளதா?
நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜக கூட்டணியில் இருப்போம் என்று கூற அதிமுகவுக்கு தகுதி உள்ளதா? 2026 மட்டுமல்ல, 2031 வரை பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, மக்களை ஏமாற்றி மீண்டும் அவர்களோடு கூட்டணி வைத்துள்ளீர்கள். எங்களது கூட்டணி ஆட்சியமைத்திருந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கும் என்று சவால் விடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.