இ-பாஸ் நடைமுறையை மலைப்பகுதிகளில் தொடரலாமா? உயர்நீதிமன்றம் கேள்வி?

இ-பாஸ் நடைமுறையை மலைப்பகுதிகளில் தொடரலாமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதிலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு சில தளர்வுகளை அளித்து வந்தது. அதில் ஒன்றாக போக்குவரத்துகளை அனுமதித்தது. அத்துடன் வெளி மாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் மாவட்ட கலெக்டரிடம் இ பாஸ் அனுமதி பெற்று வெளியில் செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. இந்நிலையில் பல இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மலைப்பகுதிகளில் மருத்துவ வசதிகள் குறைவாக இருக்கும் மற்றவர்கள் மலைப் பகுதிகளுக்கு செல்லும் பொழுது கொரானா வைரஸ் அதிக அளவில் பரவ வாய்ப்புகள் ஏற்படும் எனவே தற்போது வரை மலைப் பகுதிகளுக்கு செல்ல இ-பாஸ் உடன் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மலைப்பகுதிகளில் இ-பாஸ் நடைமுறையை தொடர்ந்து அமல்படுத்தலாமா? எனவும் அவ்வாறு அமல்படுத்தலாம் அல்லது அமல்படுத்தக் கூடாது என்றால் அதற்கான விளக்கத்தை மத்திய அரசிடமிருந்து பெற்று விளம்பரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025