இறந்தவர் சடலத்திருந்து பரவுமா கொரோனா? மருத்துவர் சங்க தலைவர் விளக்கம்!
சென்னையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு. இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவுமா? மருத்துவர்கள் விளக்கம்
கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியா முழுவதுமே தற்போது அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் இருக்குமாறும், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் தன்னலமற்று பணியாற்றும்மாறும் நிலை வந்துவிட்டது. இந்நிலையில் தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் 2 தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் கீழ் மருத்துவராக வேலை செய்து வந்த 55 வயது மருத்துவர் ஒருவர் பாதிப்பால் இன்று உயிரிழந்தார்.
அவரது உடலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு எடுத்துச் செல்லும் பொழுது வேலங்காடு பகுதியில் உள்ள மக்கள் ஆம்புலன்சை வழிமறித்து ஓட்டுநர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது சம்பந்தப்பட்ட 20 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இறந்த அந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுக்கும் மக்கள் அவரது சடலத்தில் இருந்து கொரோனா பரவலாம் என்று அச்சப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ சங்கத் தலைவர் செந்தில்குமார் கூறும் பொழுது, இறந்தவரின் உடலிலிருந்து கொரோனா பரவும் என்பது இதுவரை உறுதி செய்யப்படாத ஒன்று. மேலும், அவர் மக்களுக்காக தன்னலமின்றி சேவையாற்றியவர் என்பதால் அவரது உடல் அடக்கம் செய்வதை எதிர்ப்பது மனிதாபிமானம் இல்லாதது என தெரிவித்துள்ளார்.