#FACTCHECK: தமிழகத்தில் அடுத்தடுத்து உருவாகிறதா ஐந்து புயல் ?
தமிழகத்தில் புயல்களால் ஏற்பட்ட சேதங்கள் சரி செய்யப்படாத நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஐந்து புயல்கள் உருவாகவுள்ளதாக தகவல் வெளியானது,ஆனால் இந்த செய்தி முற்றிலும் தவறான செய்தி.
தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று வாரங்களாகவே கன மழை, புயல் ஆகிய இயற்கை காரணங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.அதிலும் நிவர் மற்றும் புரெவி புயல்கள் ஏற்பட்டதன் காரணமாக கடலோர மாவட்டங்கள் பல பாதிப்படைந்த நிலையில், இதன் விளைவாக ஏற்பட்ட பாதிப்புகளே இன்னும் சரி கட்டப்படாத நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்தடுத்து 5 புயல் உருவாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.ஆனால் உண்மை நிலை என்ன என்பது யாரும் அறிந்திடாமல் உள்ளனர்.
அதாவது தமிழகத்தில் அடுத்தடுத்து ஐந்து புயல்கள் உருவாக இருப்பதாக வாட்சப் மற்றும் மற்ற சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவி வருகின்றன.இது முற்றிலும் தவறான செய்தி ஆகும்.இதன் காரணமாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானும் தனது ட்விட்டர் மூலமாக கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதாவது ,இதுபோன்ற செய்திகளை பரிமாற்றம் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Cut the chain of Rumors, dont forward to others. If you receive such a msg, it is pakka fake msg created by members of Whatsapp University. pic.twitter.com/TPvZok4PNM
— Pradeep John (Tamil Nadu Weatherman) (@praddy06) December 7, 2020