பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது-கமல்ஹாசன்..!
பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், குங்குமத்தை தூவிவிட்டு அவமதிப்பு செய்துள்ளனர். இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது என பதிவிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும்,வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்தமட்டுமே முடியும்; அவமானப்படுத்த முடியாது.
— Kamal Haasan (@ikamalhaasan) January 9, 2022