ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது…!மின்சாரம் கிடையாது ..!தமிழக மாசுக்கடுப்பாட்டு வாரியம் அதிரடி

Published by
Venu

ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது என்று  தமிழக மாசுக்கடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் போராட்டம்: 

தூத்துக்குடியில் வேதாந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை ஏற்படும் பாதிப்பால் தூத்துக்குடி மக்கள் போராட்டம் நடத்தினர்.மே 22ஆம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை நடத்திய தூப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை  வெளியிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணை: 

பின்  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக  வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணை டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:

Image result for தமிழ்நாடு பசுமை தீர்ப்பாயம்

டிசம்பர் 15 ஆம் தேதி தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.அதேபோல் தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது. ஆலைக்கு தேவையான மின்சார வசதியை உடனடியாக கொடுக்க வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோல் 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவு  பிறப்பித்தது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை கண்காணிப்பதற்கு குழு அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு:

பின் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்க வேண்டும்.தங்களது வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டாம்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு:

 

ஸ்டெர்லைட் வழக்கில் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து  உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தூத்துக்குடியை சேர்ந்த பாத்திமா தரப்பில் அவரது வழக்கறிஞர் ஹென்றி டிபேன் முறையீடு செய்தார் . மனுவாக தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அறிவிப்பு வெளியிட்டனர்.

பின் வழக்கு விசாரணைக்கு உகந்தது என பாத்திமா பாபு தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

பின்  ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.ஸ்டெர்லைட் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை செயல்படுத்த  தடை விதித்தது.

வழக்கில் தமிழக தலைமைச் செயலாளர், வேதாந்தா நிறுவனத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்துள்ளது. பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா என அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளது.மேலும் வழக்கை ஜனவரி 21 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது  உயர்நீதிமன்ற மதுரை கிளை.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு:

இந்த உத்தரவை எதிர்த்து  ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீய்டு செய்த அந்த மனுவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என்று கூறிய அந்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு:

இன்று (ஜனவரி 2 ஆம் தேதி) ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது . மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் தெரிவித்தது.

இந்நிலையில்  தமிழக அரசும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு தருவது குறித்து பரிசீலிக்க முடியாது. பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று  தமிழக மாசுக்கடுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Recent Posts

நிறைவடைந்த ஐபிஎல் மெகா ஏலம்! சென்னை அணி வீரர்களின் முழு லிஸ்ட் இதோ!

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…

5 hours ago

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (26/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…

9 hours ago

கனமழையை எதிர்கொள்ள உதவி எண்களை அறிவித்த புதுச்சேரி ஆட்சியர்!

புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…

9 hours ago

ரெட் அலர்ட் எதிரொலி: நாளை நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…

10 hours ago

ஈ சாலா கப் நம்தே? பெங்களூரு தேடிய ‘அடேங்கப்பா 11 பேர்’ இவர்களா?

பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…

10 hours ago

75 லட்சம் டூ 4.80 கோடி… தொக்காய் தூக்கிய மும்பை அணி! யார் இந்த அல்லா கசன்ஃபர்?

ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…

11 hours ago