கோபாலபுரத்தில் பிறந்த காரணத்துக்காக மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக முடியுமா..? – அண்ணாமலை..!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடைவிழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்து பேசிய அண்ணாமலை , நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் குமரி மாவட்டத்தில் பாஜகவினர் அமோக வெற்றிபெற்றனர்.
தமிழகத்தில்பாஜக 3-வது கட்சியாக வளர்ந்துள்ளது. திமுக கூட்டணியில் 13 கட்சிகள் உள்ளன. பாஜக தனியாக வளர்ந்துள்ளது. பிரதமர் மோடியை எதிர்க்க வேண்டும் என மம்தா, அரவிந்த் கெஜிரிவால் ஆகியோர் கிளம்பியுள்ளனர். அந்த வரிசையில் இப்போது ஸ்டாலின் கிளம்பியுள்ளார். கோபாலபுரத்தில் பிறந்த காரணத்துக்காக மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆக முடியுமா..? உபியில் உள்ள 400 இடங்களில் 300 இடங்களை வென்று பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.
2024-ல் பாஜக 400 இடங்களில் வென்று மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியை பிடிக்கும். அப்போது, கன்னியாகுமரியில் இருந்து ஒரு எம்.பி-யை அனுப்பி மத்திய அமைச்சராக ஆக்க வேண்டும் என தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025