காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் சரியில்லை எனவும் அடுத்த தடவை இதைவிட குறைவாகத்தான் சீட்டுகள் கிடைக்கும்.,காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? என்று ப.சிதம்பரம் காரைக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதிப்பங்கீடு நீண்ட இழுபறிக்கு பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது.காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி கூட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது.இதில் கலந்துகொள்ள காங்கிரஸ் பொறுப்பளர்கள் அதிகம் பேர் வரவில்லை.இதனையடுத்து வந்திருந்த பொறுப்பாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம் ,கட்சி என்றால் கடமை உணர்வுடன் வர வேண்டும் .
இதே நிலை நீடித்தால் அடுத்த தேர்தலில் 25 சீட்டுகள் கூட தரமாட்டார்கள்,காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா ? காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் சரியில்லை என்றால் தோழமை கட்சிகளை நம்பியே தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் 41 தொகுதிகள் கிடைத்தது.அதில் நாம் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றோம்.இதே நிலைமை நீடித்தால் அடுத்த தடவை இதைவிட குறைவாகத்தான் கிடைக்கும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…