உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இப்படி பேசலாமா? என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.
யோகா மருத்துவர்களுக்கான யோகா பயிற்சி வகுப்பு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் 350-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்றனர்.தமிழகத்தை சேர்ந்த 37 பேர் இதில் பங்கேற்றனர்.
அப்பொழுது மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா இந்தியில் பேசினார்.இந்த சமயத்தில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவர்கள் குறுக்கிட்டு ஆங்கிலத்தில் பேசும்படி தெரிவித்தனர்.ஆனால் ராஜேஷ் கொடேஜா,எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேசத் தெரியாது என்று கூறி ,இந்தி தெரியாதவர்கள் பயிற்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் கூறினார். இவர் இவ்வாறு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் இது குறித்து கூறுகையில்,இந்தி தெரியவில்லை என்றால் வெளியேறுங்கள் என்று மத்திய ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா கூறியது கண்டிக்கத்தக்கது.அவரின் இந்த செயல்பாடு இந்திய இறையாண்மையை உரசிப் பார்க்கும் செயல் ஆகும். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இப்படி பேசலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதவராக உள்ளார் ஆயுஷ் அமைச்சக செயலாளர் ராஜேஷ் கொடேஜா என்று தெரிவித்துள்ளார்.
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…