விநாயகர் சதுர்த்தியில் தளர்வுகள் அளிக்க முடியுமா என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாளை விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. தடையை மீறி விநாயகர் சிலை வைப்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து, பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழக அரசு வலியுறுத்தியது.இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று சிலையை கரைக்க அனுமதி கோரி கணபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழிபாட்டுக்கு பின் விநாயகர் சிலைகளை மக்கள் பெரிய கோவில் அருகில் வைக்க அனுமதி வழங்கலாமா..? மக்கள் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் சிலை வைக்க அனுமதி கொடுக்கப்படுமா..? ஆனால், கொரோனா சூழலில் மிகப்பெரிய ஊர்வலங்கள் அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று தெரிவித்தது.
மேலும், கொரோனா விதிகளை பின்பற்றி ஐந்து அல்லது ஆறு நபர்கள் சிலையை கொண்டு செல்ல அனுமதி உள்ளதா..? மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தியில் தளர்வுகள் அளிக்க முடியுமா என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து இன்று விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…