வௌவால்கள் மூலமாக கொரோனா பரவுமா ?

வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வௌவால்களை ஆய்வு செய்தது இ ந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம்.இதன் ஆய்வின் முடிவில் , தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்தாக இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.மேலும் இதனால் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் டி.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில்,NOVAL என்றால் புதிது என்று பொருள்.இந்த வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது.மக்கள் வௌவால்களை பார்த்து பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025