கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா…? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி!
மதுவை போல கஞ்சாவையும் சட்ட ரீதியாக விற்க முடியுமா என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை கல்யாணிபெட்டியில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழக அரசு கூறுகையில், போலி மது விற்பனையை தடுக்க தான் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது என கூறியுள்ளது. போலி மது விற்பனையை குறைப்பதற்காக டாஸ்மாக்கை திறந்துள்ளோம் என கூறும் தமிழக அரசால் கஞ்சாவையும் சட்டரீதியாக விற்க முடியுமா என உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
அதே சமயம் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடினால், வேறு மாநிலங்களுக்குச் சென்று மதுவை வாங்குவதற்கும், இந்தியாவில் மது கடைகளை மூடினால் வேறு நாட்டிற்கு சென்று மது வாங்குவதற்கும் மது பிரியர்கள் தயாராக உள்ளனர். எனவே அரசை மட்டும் குறை கூறக்கூடாது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.