தமிழகத்தில் 2,382 பேர் நேற்று இரவு வரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மினி கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் எல்லாம் கொரோனா சிகிக்சை அளிக்க வந்தார்கள் கொரோனா அளவு வேகமாக குறைந்து உள்ளதால் 5 ஆயிரத்திற்கும் கீழே வரும்போது மீண்டும் அனைத்து மருத்துவர்களும் மினி கிளினிக்கு அனுப்பி வைப்பார்கள். தடுப்பூசியை மினி கிளினிக்கில் தான் போட வேண்டும் என்கிற நிலை இல்லை.
முதல்வர் கிராமங்களுக்கே சென்று அவர்களின் இருப்பிடங்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிற பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்தத் துறையின் கீழ் 3 ஆயிரம் தொழுநோயாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கென்று நாளை ஒரு ஸ்பெஷல் கேம்ப் சோழிங்கநல்லூரில் தொடங்கி வைக்கஉள்ளோம். நாளிலிருந்து ஒரு பத்து நாட்களுக்குள் அந்த 3,000 பேருக்கு தமிழ்நாடு முழுவதிலும் வீட்டுக்கே தேடிச் சென்று தடுப்பூசி போடப்படுகிறது பணி நடைபெறும் என தெரிவித்தார்.
தமிழகத்தில் 2,382 பேர் நேற்று இரவு வரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை அதில் ஆரம்ப நிலையில் வந்து சிகிச்சை பெற்றவர்கள் 111 நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருந்து கொண்டிருக்கிறது.
கருப்பு பூஞ்சை நோய் முதலமைச்சர் கருப்பு காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்து உள்ளதா மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…