கருப்பு பூஞ்சை நோய் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாமா..? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்..!

Default Image

தமிழகத்தில் 2,382 பேர் நேற்று இரவு வரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், மினி கிளினிக்கில் உள்ள மருத்துவர்கள் எல்லாம் கொரோனா சிகிக்சை அளிக்க வந்தார்கள் கொரோனா அளவு வேகமாக குறைந்து உள்ளதால் 5 ஆயிரத்திற்கும் கீழே வரும்போது மீண்டும் அனைத்து மருத்துவர்களும் மினி கிளினிக்கு அனுப்பி வைப்பார்கள். தடுப்பூசியை மினி கிளினிக்கில் தான் போட வேண்டும் என்கிற நிலை இல்லை.

முதல்வர் கிராமங்களுக்கே சென்று அவர்களின் இருப்பிடங்களுக்கு தடுப்பூசி போடவேண்டும் என்று கூறியுள்ளார். அந்த வகையில் தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது முகாம்கள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக சென்னை மாநகராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடப்படுகிற பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை இந்தத் துறையின் கீழ் 3 ஆயிரம் தொழுநோயாளிகள் என்று சொல்லப்படுபவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கென்று  நாளை ஒரு ஸ்பெஷல் கேம்ப் சோழிங்கநல்லூரில் தொடங்கி வைக்கஉள்ளோம். நாளிலிருந்து ஒரு பத்து நாட்களுக்குள் அந்த 3,000 பேருக்கு தமிழ்நாடு முழுவதிலும்  வீட்டுக்கே தேடிச் சென்று தடுப்பூசி போடப்படுகிறது பணி நடைபெறும்  என தெரிவித்தார்.

தமிழகத்தில் 2,382 பேர் நேற்று இரவு வரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை அதில் ஆரம்ப நிலையில் வந்து சிகிச்சை பெற்றவர்கள் 111 நலம் பெற்று வீடு திரும்பி உள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் இருந்து கொண்டிருக்கிறது.

கருப்பு பூஞ்சை நோய் முதலமைச்சர் கருப்பு காப்பீடு திட்டத்தின் கீழ் இணைந்து உள்ளதா மருத்துவமனைக்கு செல்லக்கூடியவர்கள் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது மிக விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என அவர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்