ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன், தேவேந்திரன் என்று பேசலாமா? – கே.பாலகிருஷ்ணன்
அரசியல் ஆதாயத்திற்காக சாதிவெறியும், மதவெறியும் தூண்டிவிட்டால் இலங்கை போல தமிழகம் ஆகிவிடும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அவர்கள், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வீழ்த்தப்பட்ட வேண்டும். கூட்டணி சிதைவு ஏற்பட்டு விடாமல் திமுக பார்த்துக்கொள்ள வேண்டும். ஒற்றுமை தான் முக்கியம் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடிபழனிசாமி 7 தமிழர்களை விடுதலை செய்யுங்கள் அல்லது முடிவெடுங்கள் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தார். அதை இரண்டு வருடங்களாக அவர் புரட்டி கூட பார்க்கவில்லை. ஆனால் உள்ஒதுக்கீடு விஷயத்தில் அரை மணி நேரத்தில் ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார். அன்புமணி யாரை கொள்ளைக்காரன் என்று சொன்னாரோ அவரோடு உறவாடி கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
ஒரு பிரதமர் ஜாதியோடு இணைந்து தன்னை நரேந்திரன், தேவேந்திரன் என்றெல்லாம் பேசலாமா? பாஜக-அதிமுக இரண்டும் சாதிகளை அணிதிரட்டி உணர்வுகளை தூண்டிவிடும் வேலையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்துக்களுக்கு துரோகம் செய்வதுதான் பாஜக என்று சமையல் எரிவாயு விலை உயர்வை சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக சாதிவெறியும், மதவெறியும் தூண்டிவிட்டால் இலங்கை போல தமிழகம் ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளார்.