கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்! பொதுக்கூட்ட மேடைக்கு வந்தடைந்தார் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.
நேற்று இரவு கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தேனி ஆண்டிப்பட்டியில் நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கரிசல்விலக்கு பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்தார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி ஆண்டிப்பட்டியில் நடைபெறும் பிரசார பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார் .மேடையில் முதல்வர், துணை முதல்வர், பொன்.ராதாகிருஷ்ணன், பிரேமலதா உள்ளிட்டோர் உள்ளனர்.