இன்றுடன் நிறைவுபெறும் பரப்புரை… திருவொற்றியூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் சீமான்.!

Default Image

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்றுவரை 28 நாட்கள் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு உள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 28வது நாளாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். கடந்த மார்ச் 7ம் தேதி 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தபின் பரப்புரையை தொடங்கிய சீமான், அவர் போட்டியிடும் சொந்த தொகுதியான திருவொற்றியூர் தொகுதியில் இதுவரை 8 முறை பரப்புரையாற்றியுள்ளார்.

மீதமுள்ள நாட்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சீமான், இல்லாத நாட்களில் அக்கட்சி நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், இன்றுடன் நிறைவடையும் பரப்புரையையொட்டி, தேர்தலுக்கு முந்தைய கடைசி இரன்டு நாட்களாக அவரது சொந்த தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

திருவொற்றியூர் தொகுதியில் வீதி வீதியாக சென்றும், இளைஞர்களுடன் கைப்பந்து விளையாடியும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக இன்றைய தினம் மணலியில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்த தொகுதியில் ஏற்கனவே, நாம் தமிழர் கட்சி சார்பில் கொரோனா காலத்தில் செய்யப்பட்ட நலத்திட்ட பணிகள்,  தற்போது அதானி குழுமத்தினால் அமைக்கப்படும் துறைமுகத்தை எதிர்த்து போராடி வருவதால் சீமானுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.

மக்கள் கொடுத்த நம்பிக்கையின் அடிப்படையில், தனக்கு வெற்றி நிச்சயம் என்ற நிலையில், தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். மேலும் இந்த தொகுதியில் கலை கல்லூரி, 24 மணிநேரம் இயங்கக்கூடிய அரசு மருத்துவமனை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்து, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று மாலை 4 மணிக்கு சாத்தான்கரை என்ற பகுதில் பொதுக்கூட்டம் நடத்தி, தேர்தல் பரப்புரையை நிறைவு செய்ய இருக்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்