தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பிலும், திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனவரி 29-ஆம் முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளதாக அறிவித்தார்.
விடியலை நோக்கி, மக்கள் கிராம சபையை தொடர்ந்து “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பிரச்சாரம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலை மாலை என 30 நாட்களுக்கு உங்கள் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். திமுக ஆட்சிக்கு வந்ததும் போர்க்கால அடிப்படையில் மக்கள் பிரச்சினைகளுக்கு 100 நாள்களில் தீர்வு என ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளனர். தமிழகத்தின் கடன் சுமையை 5 லட்சம் கோடியாக மாற்றியது தான் அதிமுகவின் சாதனை. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் மக்களிடம் விண்ணப்பம் தந்து பிரச்சனையை கேட்டு அறியப்படும். விண்ணப்பத்தில் மக்கள் குறைகளை எழுதித் தந்தால் 100 நாள்களில் பிரச்சனை தீர்க்கப்படும் என அவர் தெரிவித்தார்.
மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். மக்கள் பிரச்சனைகளை 9171091710 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். www.stalinani.com என்ற இணையதளம் வாயிலாக புகார்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…