விழுப்புரத்தில் நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல்!
விழுப்புரத்தில் நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தாக்கத்தால் 64,603 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 833 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில், கொரோனா பரவுவதை தவிர்க்கும் வகையில், நடத்துனர்களுக்கு விசிலுக்கு பதிலாக காலிங் பெல் வழங்கப்பட்டுள்ளது. நடத்துனர்கள் வாயில் விசில் வைத்து ஊதுவதால், காற்றின் வழியாக நோய் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளதால், இதனை தவிர்க்கும் வகையில், சோதனை அடிப்படையில், 10 பேருந்துகளில் பேட்டரியில் இயங்கும் காலிங் பெல் வழங்கப்பட்டுள்ளது.