பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
தமிழகத்தில் திமுக + காங்கிரஸ் கூட்டணிக்கு முடிவாகி தொகுதி பங்கீடு நடைபெற்றுள்ளது.இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் திமுக கட்சியின் தோழமை கட்சிகளாக இருக்கும் சிபிஎம் , சிபிஐ , விசிக மற்றும் மதிமுக கட்சிகள் சார்பில் விரைவில் தொகுதி பங்கீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான அடுத்தகட்ட பணியான தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்து வருகின்றது.இதுகுறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது , தமிழக முன்னேற்றத்தில் பங்கேற்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உங்கள் கனவுகள் புதுமையான எண்ணங்கள் எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தலில் பகிர்ந்துகொண்டு எங்களோடு கரம் சேர்க்க வாருங்கள் இந்த அடிமை அரசால் வளர்ச்சி என்பது அதல பாதாளத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது.தமிழகத்தை முன்னேற்றுவதில் உங்கள் கருத்துக்களை அறிய ஆவலாக உள்ளேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.