கமலுக்கு மீண்டும் அழைப்பு…….தமிழகம் வரும் பிரியங்கா காந்தி…. KS.அழகிரி உறுதி…!!
தமிழக காங்கிரஸ் கமிட்டின் புதிய தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் KS.அழகிரி . இவர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் தேர்தல் பரப்புரைக்காக பிரியங்கா காந்தி தமிழகம் வர இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் , காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் இணைய வேண்டும் . கமலஹாசன் மதச்சார்பற்ற கருத்துடையவர் அவருடைய கருத்தும் எங்கள் கூட்டணி கட்சிகளின் கருத்தும் பல்வேறு இடங்களில் இணைந்து போகிறது எனவே ஒத்த கருத்துடையவர்களை ஒன்றிணைப்பது எங்களுடைய அணியை மேலும் பலமாகும் என்று அவர் தெரிவித்தார்.