கைப்பேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கீடு – மின்வாரியம் அதிரடி..!
தமிழ்நாடு மின் வாரியம் , பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல்படுகிறது. முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர்.
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கைபேசி செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை சோதனை அடிப்படையில் அமல் படுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் வாரியத்தின் பல்வேறு சேவைகள் டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், தற்போது சோதனை முறையில் செயலின் மூலம் செல்போன் செயலி மூலம் மின் கட்டணம் கணக்கிடும் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
முதல்கட்டமாக சென்னை, வேலூர் மண்டலங்களில் மட்டுமே சோதனை முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளனர். நுகர்வோரே மின் கட்டணத்தை கணக்கிடும் வகையில் கைபேசி செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.