மிதுன ராசிக்காரர்களே இந்த வாரம் உங்களுக்கு எப்படி ?

Default Image

மிதுன ராசிக்காரர்களே!
இந்த வாரம் ராசிநாதன் புதன் சப்தமஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை புதன், குரு, சனி பார்க்கிறார்கள். பணவரத்து மனமகிழ்ச்சியைத் தரும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்தவொரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். வாக்கு வன்மையால் நன்மை கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில், வியாபாரம் திட்டமிட்டபடிச் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்க காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு, வீண் அலைச்சல் குறையும். எதிர்பார்த்த அதிகாரம், அந்தஸ்து கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு முயற்சிகளில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். கலைத்துறையினர் உடன் பணிபுரிபவர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கியஸ்தர்களின் உதவி கிடைக்கும். மாணவர்களுக்குக் கல்வி பற்றிய பயம் நீங்கும். ஆசிரியர்களின் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு
நிறங்கள்: பச்சை,மஞ்சள் | எண்கள்: 3, 5
பரிகாரம்: நரசிம்மரை தீபம் ஏற்றித் தரிசித்து வரக் கடன் பிரச்சினை குறையும். வீண் அலைச்சல், பயம் குறையும்.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்