மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றி அமைப்பு.. யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்து அறிவிப்பு.
தமிழக அரசின் அமைச்சரவையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பதவி தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், நிதி மேலாண்மை, மனித வள மேலாண்மை, ஓய்வூதியம், புள்ளியியல் ஆகிய துறைகளை தங்கம் தென்னரசு கவனிப்பார்.
மேலும், தங்கம் தென்னரசு ஏற்கனவே வகித்து வந்த தொல்லியல் துறையை அவரே கவனிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டி.ஆர்.பி.ராஜாவுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வகித்து வந்த தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில் நுட்பத்துறை பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்று நாசரிடம் இருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் பதவி மனோ தங்கராஜ்-க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தங்கம் தென்னரசுவிடம் இருந்து தமிழ்வளர்ச்சித்துறை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#BreakingNews | மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றி அமைப்பு.. யார் யாருக்கு எந்தெந்த துறைகள்?#TNGovt | #TNCabinetReshuffle | #CabinetShuffle #MKStalinCabinet pic.twitter.com/xseQYaJhQb
— Dinasuvadu (@Dinasuvadu) May 11, 2023