முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்.!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
சென்னை: சட்டப்பேரவை 5-வது கூட்டத்தொடரின் 2-ம் கூட்டம் கடந்த மார்ச் 20-ல் தொடங்கி ஏப்.21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதை செயல்படுத்தும் முறைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
குறிப்பாக, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் குறித்து விவாதித்து, அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஜனவரியில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் முதலீட்டை ஈர்க்க அமைச்சர்கள், அதிகாரிகள் வய நாடு பயணம் குறித்தும் ஆலோசனை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025