முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ளது.
தமிழக தொழில்துறை சார்பில், அடுத்த ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில், புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கம் பற்றியும் விரிவான கருத்தரங்கங்கள் நடைபெற உள்ளன.
இந்த மாநாடு குறித்து ஆலோசனையில் ஈடுபடுவதற்கு தான், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் தலைமைச் செயலகத்தில் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக, முன்னதாகவே அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், இன்று கூடும் அமைச்சரவை கூட்டத்தில் மாநாடு தவிர்த்தும் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இன்றைய (31.10.2023) பெட்ரோல், டீசல் விலை..!
இந்த ஆலோசனை கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடுகள், மகளிர் உரிமை தொகை திட்டம், ஆளுநர் நிறுத்தி வைத்துள்ள மசோதாக்கள் மற்றும் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், அதிக முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசுக்கும், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையான கருத்து மோதல்கள், நிர்வாக ரீதியிலான வேறுபாடுகள் ஆகியவை தொடர்ந்து கொண்டு இறுகின்றன. ஆளுனரை திரும்ப பெற கோரி தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டது. ஆளுநருக்கு எதிராக தீர்மானங்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதனை தொடர்ந்து இன்று ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.