வரும் சனிக்கிழமை தமிழக அமைச்சரவை கூட்டம்.! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?!

மே மாதம் 2ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கானது, வரும் மே மாதம் 3ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், வரும் சனிக்கிழமை ( மே மாதம் 2ஆம் தேதி ) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது தளர்வு அளிக்கப்படுமா என ஆலோசிக்க உள்ளத்தாக தகவல் வெளியாகியுள்ளது.