முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது…!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்.17-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் கூட உள்ள நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ள விவகாரங்கள் தொடர்பாக அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட உள்ளது. கடந்த மாதம் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், மீண்டும் இன்று அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கான மசோதா வரும் 17-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளன. இந்த நிலையில், அந்த மசோதாக்கள் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசிக்க உள்ளது.