இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்
சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
தமிழகத்தில் கொரோனா நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.இந்த கூட்டத்தில் மருத்துவர்கள் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தான் நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியோடு ஊரடங்கு நிறைவடையும் நிலையில், இன்று மாலை தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த ஊரடங்கை நீடிப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தகவல் வந்துள்ளது.