15 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் புதிய முதலீடுகள்.. வேலைவாய்ப்புகள்.! அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.!
தமிழகத்தில் 15,610.43 கோடி செலவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது. – அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்.
இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அடுத்த வாரம் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் 15,610.43 கோடி செலவில் தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளது.
இந்த புதிய தொழில்நுட்ப முதலீடுகள் மூலம் 8,726 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் முதலீடுகள் வரவுள்ளன. மேலும், 8 புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. என அமைச்சரவை ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.