குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டில் எதிர்ப்பு கிளம்பி அது போராட்டமாக மாறி உள்ளது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் அசாம் மாநிலத்தில் அமைதி நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க மேற்கொண்ட காவல்துறையின் தடியடியால் போராட்டம் விஷ்வரூவம் எடுத்தது.போலீசாரின் இந்த தாக்குதலை கண்டித்து மாணவர் அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மநீம,திமுக,இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமல்லாமல் தனிநபர்கள் என உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 59 வழக்குகளையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,நீதிபதிகள் பி.ஆர்.கவாய்,சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றாக ஒன்றினைத்து விசாரித்தது.
அப்போது குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர்.இந்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 22 க்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்து வழக்கின் விசாரணையை அதே 22 ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…