குடியுரிமை சட்டத்திற்கு எதிராக குவிந்த வழக்குகள்-சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..!
- குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் மற்றும் தனிநபர்கள் உள்ளிட்டோர் 59 வழக்குகள் தாக்கல்
- உச்சநீதிமன்றம் குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
குடியுரிமை சட்டம் தொடர்பாக நாட்டில் எதிர்ப்பு கிளம்பி அது போராட்டமாக மாறி உள்ளது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது.மேலும் அசாம் மாநிலத்தில் அமைதி நிலவுவதால் அங்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க மேற்கொண்ட காவல்துறையின் தடியடியால் போராட்டம் விஷ்வரூவம் எடுத்தது.போலீசாரின் இந்த தாக்குதலை கண்டித்து மாணவர் அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மநீம,திமுக,இந்திய யூனியன் மூஸ்லீம் லீக், உள்ளிட்ட அமைப்புகள் மட்டுமல்லாமல் தனிநபர்கள் என உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 59 வழக்குகளையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே,நீதிபதிகள் பி.ஆர்.கவாய்,சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒன்றாக ஒன்றினைத்து விசாரித்தது.
அப்போது குடியுரிமை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் மறுத்து விட்டனர்.இந்த சட்டம் தொடர்பாக மத்திய அரசு ஜனவரி 22 க்குள் பதில் அளிக்க வேண்டும் என்ற உத்தரவினை பிறப்பித்து வழக்கின் விசாரணையை அதே 22 ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.