குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் தொடரும் போராட்டம்!
- குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
- தமிழகத்தில் திருச்சியில் இஸ்லாமிய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த மசோதா சட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் திருச்சியில் இஸ்லாமிய அமைப்புகள் இன்று திருச்சி உழவர் சந்தையில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் சுமார் 3000 இஸ்லாமியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இவர்கள் போராட்டம் நடத்தினர்.