குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கிருஷ்ணகிரி, மதுரை, சேலத்தில் தொடரும் போராட்டங்கள்!

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இரண்டாவது வாரமும் பல இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
  • தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, மதுரை என தமிழ்நாட்டிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது. வடமாநிலங்களில் மட்டும் தீவிரமடைந்த இந்த போராட்டம், தென்மாநிலங்களில் நடந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜமாத் கூட்டமைப்பு அண்ணா சாலை முன்பு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர்.  அதே போல மதுரை மாவட்டத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. மதுரையில் ஆதி தமிழர் பேரவை அமைப்பு மதுரை ரயில்நிலையத்தில் போராட்டம் நடத்தினர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதால் போலீசார் போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி அவ்விடத்திலிருந்து அகற்றினர். அதனால் அங்கு பரபரப்பான சூழல் அங்கு நிலவுகிறது.

அதே போல சேலத்திலும், தபால் நிலையம் அருகே ஏராளமான இஸலாமியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்